பன்னிரண்டாம் வகுப்பு மீத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி
புதுக்கோட்டை,ஜன,4-
புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அரசுப்பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடத்தில் தகுதித்தேர்வு நடத்தி 50 மீத்திற மாணவர்களை தேர்வு செய்து மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்களின் ஏற்பாட்டின்பேரில் உண்டு உறைவிட பயிற்சி முகாம் இலுப்பூர் மேட்டுச்சாலை மதர்தெரசா கல்வி நிறுவனத்தில் கடந்த செப்டம்பர் 30ந்தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இதில் புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் அரசுமேல்நிலைப்பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் சிறந்த நிபுணத்துவம் பெற்ற பாடவல்லுனர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியானது வருகிற பிப்ரவரி 26ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. அதனைத்தொடர்ந்து அந்த மாணவர்கள் மார்ச்2017-ல் நடைபெறும் அரசுபொதுத்தேர்வினை எழுத உள்ளனர். அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக நடைபெறும் இப்பயிற்சியினை மாண்புமிகு மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் ஆங்கிலப்புத்தாண்டு அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சு.கணேஷ் அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு மாணவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து பேசும்போது கூறியதாவது, அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர்ந்து படிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இப்பயிற்சியானது பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டும் இப்பயிற்சியானது சிறப்பாக நடைபெற்று அதில் பயின்ற மாணவர்கள் தற்போது தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்து மேற்படிப்பு படித்து வருகிறார்கள் என்பது மிகவும் சிறப்பானதாகும். கடந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த 13 மாணவர்கள் அரசுப்பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண் பெற்றதின் காரணமாக அரசுமருத்துவக்கல்லூரிகளில் மருத்துவப்படிப்புக்கு தேர்வு பெற்று மேல்படிப்பு படித்து வருகிறார்கள். அதுபோல இந்த ஆண்டு பயிற்சி பெறும் நீங்கள் அனைவரும் ஒவ்வொரு நொடியினையும் வீணாக்காமல் சிறப்பாக பயின்று வருகிற மார்ச் 2017-ல் நடைபெறும் அரசுப்பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அனைவரும் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர வாழ்த்துகிறேன். கடந்த ஆண்டு நடைபெற்ற பயிற்சி;க்கு உதவியதுபோல இந்த ஆண்டும் உங்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து தருகிறேன். மறைந்த தமிழக முதல்அமைச்சர் அம்மா அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று மேற்படிப்பு படிக்க முடியாதநிலையில் இருந்த ஏழை மாணவர்களை கண்டறிந்து அவர்களின் உயர்கல்விக்குரிய செலவு முழுவதையும் ஏற்று அவர்களின் வாழ்க்கைக்கு ஒளிவிளக்காக இருந்தார்களோ அதுபோல இந்த ஆண்டும் பன்னிரண்டாம் வகுப்பில் அரசு பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண் பெற்று மேற்படிப்பு படிக்கஇயலாத நிலையில் உள்ள ஏழை மாணவர்களை கண்டறிந்து உதவி செய்ய அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். மேலும் மாணவர்களிடம் பயிற்சி குறித்து கருத்துக்களை கேட்டறிந்து நீட்(Nநுநுவு) நுழைவுத்தேர்விற்குரிய வசதிக்கும் ஜேஇஇ(துநுநு) நுழைவுத்தேர்வுக்குரிய வசதிக்கும் ஏற்பாடு செய்வதாக கூறினார். மாண்புமிகு மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு மீத்திறன் மாணவர்களுக்கான உண்டு, உறைவிட சிறப்பு பயிற்சி முகாம் பார்வையின்போது மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலர் திருமதி செ.சாந்தி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திரு கபிலன், மற்றும் பலர் உடனிருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அரசுப்பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மீத்திறன் மாணவர்களுக்காக இலுப்பூர் மேட்டுச்சாலை மதர்தெரசா கல்வி நிறுவனத்தில் நடைபெறும் உண்டு உறைவிடப்பயிற்சி முகாமினை மாண்புமிகு மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் பார்வையிட்டபோது எடுத்தபடம். படத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சு.கணேஷ், புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி செ.சாந்தி மற்றும் பலர் உள்ளனர்.
பன்னிரண்டாம் வகுப்பு மீத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி
Reviewed by Unknown
on
11:50:00 PM
Rating:
No comments: