பத்திரிக்கை செய்தி: புதுக்கோட்டை மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி
புதுக்கோட்டை (தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி)யில் பள்ளிக் கல்வித்துறையின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சு.கணேஷ் தொடங்கி வைத்தார்.
தேர்வு செய்யப்பட்ட 10 சிறந்த படைப்புகளுக்கு தலா ரூ.1000 ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.V.R.கார்த்திக் தொண்டைமான், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.செ.சாந்தி,புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் (பொ) திரு.மாணிக்கம்,RMSA மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி.ராதிகாபிரசன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவர்களின் படைப்புகளை ஆர்வமுடன் பார்வையிட்டு வாழ்த்தினர்.
பத்திரிக்கை செய்தி: புதுக்கோட்டை மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி
Reviewed by Unknown
on
9:04:00 PM
Rating: