தங்கள் பள்ளியின் செய்திகள்/நிகழ்வுகள் இந்த தளத்தில் இடம்பெற செய்தி மற்றும் புகைப்படங்களை krishnan.pmv@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.பிற மாவட்ட பள்ளிகளும் அனுப்பலாம்.

தலைமைஆசிரியா்களுக்கான தலைமைப்பண்பு மேம்பாட்டுப்பயிற்சி தொடக்க விழா.

புதுக்கோட்டை,ஆக.2-



புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கான தலைமை மேம்பாட்டுப்பயிற்சியின் தொடக்கவிழா
புதுக்கோட்டை லேணாவிளக்கு மவுண்ட்சீயோன்பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் செ.சாந்தி தலைமை தாங்கி பயிற்சியினை குத்துவிளக்கேற்றி  தொடங்கி வைத்து பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து தலைமையுரை ஆற்றினார்.



முதற்கட்டமாக நேற்று தொடங்கி வருகிற 5ந்தேதி(வெள்ளிக்கிழமை) வரையும், இரண்டாம் கட்டமான வருகிற 16ந்தேதி தொடங்கி வருகிற 20ந்தேதி வரையும் ஆக 10 நாட்கள் இப்பயிற்சி நடைபெறும். இப்பயிற்சியில் மாவட்டத்தின் அரசு உயா்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தெரிவுப்பெற்ற 30 தலைமைஆசிரியா்கள் பங்கேற்றுள்ளனா். சென்னை விஜயலட்சுமி, கொத்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை கே.ஜெயந்தி, ஒத்தைப்புளிகுடியிருப்பு அரசு உயா்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியா் லெட்சுமி, வல்லத்திராக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் சேகா், கனவு ஆசிரியரைத்தேடி இயக்குநா் தாமரைக்கண்ணன் மற்றும் பா.முனிராமையா, புதியாசலம், தென்கரைமுத்துப்பிள்ளை, ஆகியோர் கருத்தாளா்களாக கலந்துகொண்டு பயிற்சியளித்துவருகிறார்கள். முன்னதாக விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்ட மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெ.ராதிகாராணிபிரசன்னா வரவேற்று பேசினார். கொத்தமங்கலம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியா் ஜெயந்தி நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் செ.சாந்தி அவா்களின் வழிகாட்டலின்பேரில் மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெ.ராதிகாராணிபிரசன்னா, கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சி.பன்னீா்செல்வன், க.ராஜா ஆகியோர் செய்துள்ளனா். 
தலைமைஆசிரியா்களுக்கான தலைமைப்பண்பு மேம்பாட்டுப்பயிற்சி தொடக்க விழா. தலைமைஆசிரியா்களுக்கான தலைமைப்பண்பு மேம்பாட்டுப்பயிற்சி தொடக்க விழா. Reviewed by Unknown on 9:49:00 AM Rating: 5

No comments:

Powered by Blogger.