அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தொண்டு நிறுவனக் குழந்தைகளுடன் தீபத் திருநாள் கொண்டாடினர்
அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தொண்டு நிறுவனக் குழந்தைகளுடன் தீபத் திருநாள் கொண்டாடினர்
அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தீபத் திருநாளை முன்னிட்டு தொண்டு நிறுவன மாணவர்களை சந்தித்து வாழ்த்துகளையும், இனிப்புக்களையும் பரிமாறிக் கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் பேரில் காசா மற்றும் RDO தொண்டுநிறுவன மாணவர்களைச் சந்திப்பது போல், இவ்வாண்டும் தலைமை ஆசிரியர் சேகர்தலைமையில் உதவித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் நேரடியாகச் சென்று வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
விழாவில் தலைமை ஆசிரியர் சுற்றுச் சூழல் மாசுபடாமல் மாசு இல்லா, விபத்தில்லா தீபாவளி கொண்டாட மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேசினார். பள்ளி மாணவர்கள் தொண்டு நிறுவன மாணவர்களுக்கும் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் இனிப்புகளை வழங்கிப் பாராட்டினர்
விழாவினை முதுகலை ஆங்கில ஆசிரியர் ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.
அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தொண்டு நிறுவனக் குழந்தைகளுடன் தீபத் திருநாள் கொண்டாடினர்
Reviewed by Unknown
on
10:06:00 AM
Rating:
No comments: