16.10.2016 பத்திரிகை செய்தி: அறிவியல் கண்காட்சி: 20 சிறந்த படைப்புகள் தேர்வு
16.10.2016 பத்திரிகை செய்தி:
புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் சனிக்கிழமை மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கண்காட்சியை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செ. சாந்தி தொடக்கிவைத்துப் பேசியது:
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் பிறந்த நாளான அக்.15-ஆம் தேதியை இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாட தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நன்னாளில் இந்தியாவின் எதிர்காலத் தூண்களாகிய நீங்கள் வைத்துள்ள அறிவியல் படைப்புகள் சிறந்த படைப்புகளாக மாநில அறிவியல் கண்காட்சிக்கு தேர்வு பெற்று அதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்த விஞ்ஞானிகளாக வாழ்த்துகிறேன் என்றார்.
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை, அறந்தாங்கி கல்வி மாவட்டப் பள்ளிகளில் இருந்து 6,7,8 வகுப்புகள் ஒரு பிரிவாகவும், 9,10 வகுப்புகள் ஒரு பிரிவாகவும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் என 3 பிரிவுகளாக மாணவர்கள் தங்களது அறிவியல் படைப்புகளை வைத்திருந்தனர்.
புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் இருந்து 128 படைப்புகளும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் இருந்து 116 படைப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில் முதல் கட்டமாக புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் இருந்து காரையூர்,
புலியூர், விராலிமலை, மெய்யபுரம், இலுப்பூர், புதுக்கோட்டை அரசு ராணியார் பெண்கள், திருஇருதய மகளிர், கொடும்பாளூர், கோமாபுரம், ராப்பூசல் ஆகிய 10 பள்ளிகளின் படைப்புகளும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் கல்லூர், அறந்தாங்கி செலக்சன், கீழாநிலைக்கோட்டை, சிலட்டூர், கே.ராசியமங்கலம் மேரிஇமாகுலேட், பாதரக்குடி ஆர்.சி. பள்ளி, கீழையூர், அரையப்பட்டி ஆகிய 10 பள்ளிகளின் படைப்புகள் உள்பட மொத்தம் 20 படைப்புகள் தேர்வு செய்யப்ப
ட்டன.
இதிலிருந்து 3 சிறந்த படைப்புகள் தோóவு செய்யப்பட்டு மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு அனுப்பப்பட உள்ளன.
புதுகை மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் எஸ். ஜான்பெர்க்மான்ஸ், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் எம். தமிழ்ச்செல்வன், தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ஏ. ராபர்ட்தன்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்டக் கல்வி அலுவலர் உ. பரமசிவம் வரவேற்றார்.
அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் ஆர். சந்தியா நன்றி கூறினார்.

Reviewed by Unknown
on
7:51:00 PM
Rating:
No comments: